கணினி அமைப்பு(Computer System) எனப்படுவது ஒரு பூரண கணினிப் பாகங்களை உள்ளடக்கிய தொகுதி ஆகும். இதனுள் மென்பொருள்(Software), வன்பொருள்(Hardware), நிலைப்பொருள்(Firmware) மற்றும் கணினி இயங்குவதற்குத் தேவையான அத்தியாவசிய பாகங்கள் அடங்கும்.
Computer system ஆனது இயங்குவதற்கு இயங்குதளம்(Operating System) அவசியமானதாகும்.
வன்பொருள்(Hardware)
வன்பொருள் எனப்படுவது கணினியிலுள்ள தொட்டுணரக்கூடிய பாகங்களாகும். உதாரணமாக குறுவெட்டு இயக்கி(CD drive), திரை(Screen), விசைப்பலகை(Keyboard), அச்சுப்பொறி(Printer), RAM, Chip ஆகியவை இதனுள் அடங்கும்.
கணினி வன்பொருளானது இரு முக்கிய வேலைகளைச் செய்வதற்காகப் பயன்படும்.
- கணினிக்கு உள்ளீடுகளை வழங்கல்(Input the instructions into the computer).
- வெளியீடுகளைப் பெறல்(Output acquisition from the computer).
உள்ளீட்டு உபகரணங்கள்(Input Devices)
உள்ளீட்டு உபகரணங்கள் எனப்படுபவை கணினிக்கு உள்ளீடுகளை வழங்கப் பயன்படும் உபகரணங்கள் ஆகும்.
சில உள்ளீட்டு உபகரணங்கள்
- விசைப்பலகை(Keyboard)
விசைப்பலகையானது கணினிக்கு உள்ளீடுகளை வழங்கப் பயன்படும் உபகரணம் ஆகும். இதில் ஆங்கில அல்லது வேறு மொழி எழுத்துக்கள், இலக்கங்கள்(Numbers), Function keys ஆகியன காணப்படும். இதில் நாம் அழுத்தும் விசைக்கான வடிவம் Binary வடிவத்தில் கணினியைச் சென்றடைந்து அதற்கான வடிவம் கணினியால் பெறப்படும். சாதாரண விசைப்பலகையில் 104 விசைகள் காணப்படும்.
- சுட்டி(Mouse)
சுட்டி(Mouse) ஆனது கணினியில் சுட்டுவதற்காகப் பயன்படும் உபகரணமாகும். இதில் பொதுவாக 2 பட்டன்கள்(Button) காணப்படும். இடது பட்டன்(button) பொதுவாக தெரிவு செய்வதற்காகவும், வலது பட்டன்(button) பொதுவாக contextual menusஐ பார்வையிடுவதற்காகவும் பயன்படுத்தப்படும். மேலதிகமாக இதில் உருளும் சக்கரம்(scroll wheel)ஒன்றும் காணப்படும். இது scroll செய்வதற்காகப் பயன்படும்.
- Webcam
இது ஒளிப்படம் பிடிக்கும் கருவியாகும். இது அதன் முன் இருக்கும் உருவங்களை கணினித் திரையில் காட்டுவதற்காகப் பயன்படும்.

- வருடி(Scanner)
இவ் உபகரணமானது இதன் தளத்தில் வைக்கப்படும் காகிதங்களின் பிரதியை கணினிக்குள் பதிவு செய்வதற்காகப் பயன்படும்.

- Light pen
இது சுட்டி போல் ஒரு உபகரணமாகும். இதன் மூலம் கணினித் திரையை தொடும் போது தொடப்பட்ட இடம் தெரிவுசெய்யப்படும்.
வெளியீட்டு உபகரணங்கள்(Output devices)
கணினியிலிருந்து வெளியீடுகளை வழங்கப் பயன்படும் உபகரணங்கள் வெளியீடு உபகரணங்கள் ஆகும்.
சில வெளியீட்டு உபகரணங்கள்
- அச்சுப்பொறி(Printer)
அச்சுப்பொறியானது கணினியிலிருக்கும் தரவுகளை அல்லது பதிவுகளை அச்சு(Print) செய்யப் பயன்படும்.
- கணினித் திரை(Monitor)
கணினித் திரையானது கணினியில் நடக்கும் செயற்பாடுகளை நமக்குக் காண்பிக்கப் பயன்படும். சில வருடங்களுக்கு முன்னர் வரை பெரும்பாலான கணினித் திரைகள் கதோட்டு குழாய்களால் ஆக்கப்பட்டிருந்தது. தற்போது அநேகமான கணினித் திரைகள் LCD, மற்றும் LED தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றது.
- ஒலிபெருக்கி(Speaker)
ஒலிபெருக்கிகள் கணினியில் இருந்து வெளியிட வேண்டிய சத்தங்களை ஒலிபரப்பப் பயன்படும்.
வேறு சில வன்பொருட்கள்
- குறுவெட்டு இயக்கி(CD/DVD Drive)
குறுவெட்டு இயக்கியானது குறுவெட்டுகளை வாசிப்பதற்காகப்(read) பயன்படும். அதேவேளை குறுவெட்டுகளில் பதிவு செய்வதற்காகவும்(Write) பயன்படும்.
- Pen drive
Pen drive ஆனது கணினியினுள் தகவல்களை உட்புகுத்தவும் கணினியில் இருந்து தகவல்களை வெளியே எடுப்பதற்கும் பயன்படும்.
- RAM(Random Access Memory)
இது ஒரு வகையான சேமிப்பகமாகும். இது எம்மால் அந்நேரத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட தரவுகளை சேமித்து வைத்திருக்கும். கணினி தனக்கு தேவையான தரவுகளை வன்தட்டில் தேடுவதற்கு முன் RAMஇல் தேடும். இது கணினியின் முதன்மை சேமிப்பகமாகும்(Primary Storage).
- வன்தட்டு(Hard disk)
இது கணினியின் இரண்டாம் சேமிப்பகமாகும்(Secondary storage). இது பாரிய கொள்ளளவைக் கொண்டிருக்கும். இது முதன்மை சேமிப்பகதிலும் பார்க்க பல மடங்கு கொள்ளளவைக் கொண்டிருக்கும்.
மென்பொருள்(Software)
மென்பொருள் எனப்படுவது கணினியில் காணப்படும் அறிவுறுத்தல்கள் (Instructions) அல்லது தரவுகள் ஆகும்.
மென்பொருட்களானது வன்பொருட்களின் இயக்கத்திற்கு இன்றியமையாதவை ஆகும். இவையே வன்பொருட்களை அவற்றின் தேவைகளுக்கேற்ப வழிநடத்துகின்றது.
மென்பொருளானது பொதுவாக இரு வகைப்படும்.
- இயக்க மென்பொருள்(System software)
- Application software
System software
System software இனுள் இயங்குதளமும்(Operating System) கணினியின் வளங்களை தாழ் மட்டத்தில் முகாமைத்துவம் பண்ணக்கூடிய programs உம் அடங்கும்.
சில System softwares,
- Compilers
- Loaders
- Linkers
- Debuggers
Operating system
இயங்குதளமானது கணினி இயங்குவதற்குத் தேவையான முக்கிய program ஆகும். அனைத்து கணினிகளும் வேறு programsஐ இயக்குவதற்கு இயங்குதளத்தை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும்.
Application Software
Application programs எனப்படுவது இறுதி பயனரால்(End user) பயன்படுத்தப்படும் மென்பொருள் ஆகும்.
சில Application softwares
- Database programs
- Word processors
- Web browsers
- Spreadsheets
மென்பொருட்களை அவற்றின் உரித்துடைமையைப் பொறுத்து இரு வகையாகப் பிரிக்கலாம்.
- தனியுரிம மென்பொருள்(Proprietary software)
- திறந்த மூல மென்பொருள்(Open source software)
தனியுரிம மென்பொருள்(Proprietary software)
தனியுரிம மென்பொருள் எனப்படுவது மென்பொருட்களை பயன்படுத்துதல், திருத்தியமைத்தல், பிரதி எடுத்தல், மாற்றியமைக்கப்பட்ட மென்பொருளை பிறருக்கு வழங்குதல் போன்றவற்றில் கட்டுப்பாடுகள் உடைய மென்பொருள்கள் ஆகும். இம் மென்பொருளை மூடிய மூல மென்பொருள்(Closed source software) என்றும் அழைப்பர்.
சில தனியுரிம மென்பொருள்கள்,
- Microsoft office
- Adobe Photoshop
- Adobe flash
- Corel office
- Windows 8
திறந்த மூல மென்பொருள்(Open source software)
திறந்த மூல மென்பொருளானது இலவசமாகப் பயன்படுத்தப்படுவதும், அதன் அசல் மூல குறியீட்டை(Source code) பயனருக்கு வழங்குவதன் மூலம் அவற்றை மாற்றியமைக்கக் கூடிய உரிமையையும் வழங்கும் மென்பொருட்களாகும்.
சில திறந்த மூல மென்பொருள்கள்,
- Linux
- GIMP
- Blender
- Inkscape
- Mozilla Firefox
- OpenOffice
- KOffice
நிலைப்பொருள்(Firmware)
நிலைப்பொருள் எனப்படுவது கணினியின் ROM(Read Only Memory) இல் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிரந்தர மென்பொருள் ஆகும். இது மென்பொருளினதும் வன்பொருளினதும் சேர்வை ஆகும். இது ROM, PROM(Programmable Read Only Memory),EPROM(Erasable Programmable Read Only Memory) இல் காணப்படலாம்.
இம் மென்பொருளானது கணினி இயங்க ஆரம்பிக்கும் போது செயற்படுத்தப்படும்.
![]()


0 comments