NRS ICT - Easy Guide for ICT Students

NRS ICT - Easy Guide for ICT Students

தரவுத்தொடர்பாடல் (Data Communication)

தரவுகளை ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு ஊடுகடத்தல் தரவுத்தொடர்பாடல் எனப்படும். அல்லது துவித இரகசிய மொழியாக்கப்பட்ட தரவுகளை ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு அனுப்புவது தரவுத்தொடர்பாடல் எனப்படும்.

தரவுத்தொடர்பாடல் (Data Communication)

  1. தரவு முலம் (Sender / Source ): ஊடுகடத்த தேவையான தரவு உண்டாக்கப்படும் இடம்
  2.  தரவுத் தொடர்பாடல் ஊடகம்(Data Communication Media):     தரவைப்பெறுநறுக்கு கொண்டு செல்லப்பயன்படும் சாதனம்.
  3. தரவு பெறுநர் (Receiver / Sink): இறுதியாக தரவைப் பெறுபவர்.

 

மின்னணுசமிக்ஞைகளின்செலுத்துகை (Transmission of electronic signals)

கணிப்பீட்டு செய்முறைகளுக்கு இடையே செலுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி செய்தி அல்லது தரவுக்கட்டமைப்பு என்பதே சமிக்ஞையாகும். இவை இரு வகைப்படும்.

  ஒப்புமை சமிக்ஞை Analog Signals

எங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்வதாகும். பேசுதல் என்பது   தொலைபேசி கம்பியை உபயோகிக்கும் ஓர் ஒப்புமை சமிக்ஞையாகும். ஒப்புமை சமிக்ஞைகளில் சமிக்ஞை உரப்பு நேரத்துடன் மெதுவாக மாறுபடும். பொது மக்களின் தொலைப்பேசிச்சேவை ஒப்புமை சமிக்ஞைக்கு ஆதரமாக அமைந்துள்ளது

    எண்ணக சமிக்ஞை Digital Signal

எண்ணக சமிக்ஞைகள் நவீன கால கணனிகளின் மொழியாகும். எண்ணக சமிக்ஞைகள் இரு நிலைகளில் மாத்திரம் அமைந்துள்ளன. இவைகள் திறந்த (on) அல்லது மூடியது (off) ஆக முறையே 1 அல்லது 0 எனப்படும்.

v  ஒளி ஆளிகள் – திறந்த (on) அல்லது மூடியது (off)

v கதவுகள் – Open  அல்லது   Closed

 

தரவு செலுத்துகை. (Data Transmission)      

தரவு செலுத்துகை என்பது தொடர்பாடல் ஊடகங்களின் வழியாக இரு தனங்களுக்கிடையே தரவினை கொண்டு செல்வதாகும். தரவு செலுத்துகைக்கு ஒர் ஊடகம் தேவையாகும்.

செலுத்துகை ஊடகங்கள்(TransmissionMedia)

செலுத்துகை ஊடகங்களானவை சமிக்ஞைகளை ஓரு தானத்தில் இருந்து மற்றொரு தானத்திற்கு கடத்துபவையாகும். பல்வேறு வகையான செலுத்துகை ஊடகங்கள் உள்ளன.

  1. வழிப்படுத்தப்பட்ட ஊடகங்கள்/ எல்லைப்படுத்தப்பட்ட ஊடகங்கள்  (கம்பிகள்/வடங்கள் – செப்புகள், ஒளியிழை நார்கள்)
  2. வழிப்படுத்தப்படாத ஊடகங்கள்/ எல்லைப்படுத்தப்படாத ஊடகங்கள்     (கம்பியில்லா – நுண்ணலை, வானொலி, செய்மதி, செல்லிடத் தொலைபேசி)

கணினி நினைவகம் (COMPUTER MEMORY)

Posted by NRS ICT for A/L Wednesday, July 5, 2017 0 comments

கணினி நினைவகம் (COMPUTER MEMORY)

 

தரவுகள், தகவல்கள், அறிவுறுத்தல்கள் போன்றவற்றைப் பதிந்துவைக்கப் பயன்படும் கணினியின் பகுதி நினைவகம் என அழைக்கப்படுகின்றது. கணினிகள் இலத்திரனியல் முறையில் தரவுகளைச் சேமிக்கின்றன. இச்செயற்பாடுகள் மின்துடிப்புக்களை உணரும் சுற்றுக்கள் மூலம் நடைபெறுகின்றன.

 

கணனி நினைவகம்.jpg

பிரதான நினைவகம் (PRIMARY MEMORY)

தற்காலத்தில் chips இனால் உருவாக்கப்பட்ட பிரதான நினைவகம் நினைவகம் semiconductor memory ஆகியவற்றில் memory chips IC வடிவங்களிலேயே காணப்படுகின்றன. மிகச்சிறிய பகுதியினுள் பலநூறு இலத்திரனியல் பகுதிதிகளைக்கொண்ட சுற்றுக்கள் IC என அழைக்கப்படுகின்றன.

 

கணினி பிரதான நினைவகத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. RAM  (Random Access Memory – நிலையா நினைவகம்)

வாசிப்பதற்கும் பதிவதற்குமான நினைவகமாகும். இங்கு கணினியானது off ஆகும்போது இந்த நினைவகத்தில் பதிந்துவைத்திருந்தவை யாவும் அழிந்துவிடும்.

  1.  ROM  (Read Only Memory – அழியா நினைவகம்)

இந்நினைவகத்தில் பதிந்துள்ளவற்றை வாசிக்கமட்டுமே முடியும். இதிலுள்ளவற்றை அழிக்கவோ அல்லது மாற்றம் செய்யவோ முடியாது

ROM  இன் வகைகள்

  1. PROM (Programmable ROM)
  2. EPROM (Erasable Programmable ROM)
  3. EAPROM (Electrically Alternate Programmable ROM)

 

துணை நினைவகம் (SECONDARY MEMORY OR AUXILIARY MEMORY)

இங்கு பதியப்படுபவை அழியாமல் நிரந்தரமாக இருப்பதனால் இது NonVolatile Memory என அழைக்கப்படுகின்றது. அதாவது CPU  ஆனது இயங்காமல் off நிலைக்கு வந்தாலும் இதில் பதியப்பட்டுள்ளவை அழிந்துபோகாது. இது Main Memory ஐ விட வேகம் குறைந்தது

அவையாவன:

Magnetic

  1.  Magnetic Tape : இது சாதாரணமான ஒலிப்பதிவு நாடாவில் பாடல்களைப் பதிவதுபோலவே தரவுகளைப் பதிகின்றது. இச் சாதனம் கணினியிலுள்ள தகவல், தரவுகளை சேமித்து வைப்பதற்கு (Backup) பயன்படுத்தப்படுகிறது.
  2. Floppy Disk : இது ஒரு Magnetic Disk ஆகும். இதில் இரண்டு வகையுண்டு. அவையாவன :
  • 5.25" (B) Floppy
  • 3.50" (A) Floppy

 Magnetic & Optical 

  1.  Floptical Disk : காந்தவியல் தொழினுட்பம், லேசர் தொழினுட்பம் ஆகிய இரண்டு தொழினுட்பங்களையும் பயன்படுத்தித் தகவல்கள் பதியப்படும் Disk, Floptical Disk என அழைக்கப்படுகின்றது. இதனது கொள்ளளவு 20 Mega Bytes இனைவிட அதிகமானதாகும். இதனளவு 3.5" ஆக இருந்தாலும் இதற்குத் தனியான Drive தேவை.

Optical 

Optical Disk: இவ்வகை disk களில் தரவுகளைப் பதிவதற்கும் வாசிப்பதற்கும் Laser தொழினுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

 


உள்ளீட்டுச் சாதனங்கள் (INPUT DEVICES)

தரவுகளையும் நிகழ்ச்சித்திட்ட அறிவுறுத்தல்களையும் கணினியினுள் அனுப்பப் பயன்படும் சாதனங்கள் யாவும் உள்ளீட்டுப் பகுதி அல்லது உள்ளீட்டுச் சாதனங்கள் என அழைக்கப் படுகின்றன.

சில உள்ளீட்டுச்சாதனங்கள் :

1

2

வெளியீட்டுச்சாதனங்கள் (OUTPUT DEVICES)

கணினியினால் Process செய்யப்பட்ட பெறுபேறுகளைப் பாவனையாளருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்கள் யாவும் வெளியீட்டுப் பகுதி அல்லது வெளியீட்டுச் சாதனங்கள் என அழைக்கப்படுகின்றன.

சில வெளியீட்டுச்சாதனங்கள் :

3